பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

95


உணர்ந்து எல்லா ஓட்டக்காரர்களும், சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டு சுறுசுறுப்பாக நிற்க வேண்டும். கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்தாலும், நம்மை விரட்டட்டுமே பார்த்துவிடுவோம் என்ற தீரசூர மனப்பான்மையில் இருந்தாலும் எளிதாக சிக்கிக்கொள்ள நேரிடும். அதனால் எதிர்க்குழுவின் வெற்றி எண் கூடிவிடுகிறது. அப்படிக் கூடும்பொழுது, தன் குழு தோல்வி முகத்தினைத் தழுவ நேர்கிறது என்பதையும் மறந்துவிடக் கூடாது.

4. சில ஆட்டக்காரர்கள் ஏமாற்றும் கலையில் (Feinting) வல்லுநராக விளங்குவார்கள். அவர்கள் கட்டங்களில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு இடையில் உள்ள இடைப்பட்ட இடங்களில் நின்று ஆடுவதற்காக முயலக் கூடாது.

அவர்கள் உட்கார்ந்திருப்பவர்களுக்கு அப்பால் நின்று கொண்டு, விரட்டி வரும் ஆட்டக்காரரிடமிருந்து ஏமாற்றித் தப்பித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு ஏமாற்றி ஆடுபவர்களுக்கு ஒரு சாதகமான நிலை உண்டு. தப்பி ஓடும் ஓட்டக்காரர்கள் எப்படி வேண்டுமானாலும் எந்தப் பக்கமாகவேனும் முகத்தைத் திருப்பலாம் என்பது மட்டுமல்ல. விரட்டுபவர் ஓருமுகமாகத்தானே ஓடிவரவேண்டும். இந்த சங்கடமான அவரது நிலையை, தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு ஆடுதல் சாமர்த்தியம் நிறைந்த ஆட்டமாகும்.

இப்படி ஆடுவதை, எல்லைக் கோட்டின் (Boundary Line) பக்கமாக நின்று கொண்டு, தன்னை நோக்கி வரும்போது, திடீரென்று ஒரு பக்கம் போவது போல், போக்குக்காட்டி ஏமாற்றி, அவர்களை திசைமாற்றி போகச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/97&oldid=1377603" இலிருந்து மீள்விக்கப்பட்டது