பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இ எஸ்.நவராஜ் செல்லையா 總 97

६t¢ உட்கார்ந்திருப்பவர்களுக்கு இடையே நுழைந்து ஒடும்போது, உட்கார்ந்திருப்பவர்களின் முன் பக்கமாகவே (Face) தான் ஒட வேண்டும். அவர்கள் முதுகுப்புறம் இருக்கும் பக்கமாக (Back) நுழைந்து

ஒடக்கூடாது.

அவ்வாறு நுழைவதானது, விரட்டுபவருக்கு உடனே 'கோ' கொடுத்து எழுப்ப முடியாமற் போய்விடும். இவ்வாறு தப்பி ஓடும் முறையை, ஒட்டக்காரர்கள் பயிற்சிக் காலத்தில் சிறப்பாகப் பழகிக் கொள்ள வேண்டும்.

7. விரட்டி வருபவர் வேகமாக ஓடிவரும் நிலையில் எந்த ஒட்டக்காரரும் நேராகவே ஒடித் தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைத்து ஒடுவது தவறான ஆட்ட முறையாகும். விரட்டுபவர்களை அடிக்கடி கோ கொடுத்து ஆடச் செய்கின்ற நிலைக்கு ஆளாக்குவது போல, சங்கிலி ஒட்ட முறையினை ஒட்டக்காரர்கள்

பின்பற்றி ஆட வேண்டும்.

8. சங்கிலி ஒட்ட முறையினைப் பின்பற்றி, உட்கார்ந்திருப்பவர்களுக்கிடையே ஒடி ஏமாற்றி ஆடும் ஆட்டக்காரர்கள், உட்கார்ந்திருப்பவர்களுக்கிடையே தான் ஏமாற்றி ஆடிக் கொண்டிருக்க வேண்டுமே தவிர பிறந்தும் கம்பத்தின் பக்கமாகப் போய் நிற்கக் கூடாது.

கம்பத்தின் பக்கம் ஒட்டக்காரர்கள் வந்துவிட்டார்கள் 'ன்றால், விரட்டித் தொடுபவர்களுக்குத் தொட்டு வெளியேற்றும் வேலை மிக எளிதாகக் கூட அமைந்து விடும். விரட்டுபவர்களின் நோக்கமே, கம்பத்துக்கருகில் *ள்ள இடங்களுக்கு, ஒட்டக்காரர்களை ஒடச் செய்து துேக்கிக் கொண்டு போவதுதான் நோக்கமாக இருக்கிறது 'ன்பதையும் ஒட்டக்காரர்கள் மறந்துவிடக் கூடாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/99&oldid=557553" இருந்து மீள்விக்கப்பட்டது