உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பயிற்சி பெற்ற உடன் இந்தப் பெண்கள், செயலில் இறங்க உடனே ஊக்கம் பெற்றதும், இவர்கள் அறிவு, விரிந்து புதிய அநுபவங்களாக, விளைச்சலில் பலன் பெற்றதும், அண்மைக் கால வரலாறு. பண்ணை மக்களின் வாழ்வில், புதிய மாற்றங்கள் இசைந்தன. புதிய மாற்றத்துக்கான ஆதாரம், தன்னம்பிக்கையும் பொருளாதாரச் சுயச்சார்புமாகும்.

காலம் காலமாகக் குருட்டுத் தடங்களில் ஒடுக்கப்பட்டு வந்த இந்திய விவசாயக் குடும்பப் பெண், விழிப்புணர்வு பெற்றிருக்கிறாள். சிந்திக்கும் திறன் இவளுக்கு வந்திருக்கிறது. இவர்களுடைய தன்னம்பிக்கையும், சுயச்சார்பும், உழைப்பின் பயனாகப் பெற்றவை என்றாலும், சிந்திக்கும் சக்தியே அவற்றைச் சாத்தியமாக்கி இருக்கிறது. பயிர்த் தொழிலின் முன் நிற்கும் பிரச்னைகளை, சமூக நோக்கில் எதிர் நோக்குமளவுக்கு, ஒன்றுமே தெரியாமல் உழைத்து உழைத்துத் தேய்ந்திருந்த இந்தப் பெண்கள் விழிப்புணர்வு பெற்றிருக்கின்றனர்.

காலந்தோறும் பெண் என்ற கணிப்பு, பெண்களின் பின்னடைவுகளையே துல்லியமாகக் காட்டுவதான சோர்வையே தந்திருந்தது.

ஏறக்குறைய ஒரு பத்தாண்டுக்கால முயற்சியில் தான்வா என்ற பண்ணை மகளிர் குழுவினர் தமிழ் நாடெங்கும் பல்கிப் பெருகி, ஒரு புதிய வரலாறு படைப்பதைக் காணும் போது நம்பிக்கை துளிர்க்கிறது. சமூகத்தின் முன்னேற்றத்துக்கும், வளமைக்கும் ஆதாரமான தொழிலில், பெண்கள் ஈடுபட்டு, விளைவு கண்டு ஆற்றல் பெறுவது சாதனையல்லவா!

பெண்கள், பொதுத்துறைகளிலும், அரசுத் துறைகளிலும் முக்கிய இடங்களில் பொறுப்பேற்றிருப்பதும், அமைப்பு ரீதியிலான பெண்கள் இயக்கங்களின் இடைவிடாத செயல்பாடு சார்ந்த அனைத்து முடிவெடுக்கும் நிறுவனங்களுக்கும் பெண்களைக் குறிப்பாக்கியே வலியுறுத்தி இருக்கின்றன என்றால் மிகையில்லை.

இந்தத் திட்டத்தினால் பயனடைந்து, புதிய சாதனை படைக்க ஊக்கம் பெற்று வரும் பல பெண்களைச் சந்திக்க, எனக்கு ஊக்கமும் உறுதுணையுமாக இருந்தவர், டேனிடா திட்டத்தின் ஆலோசகர் திருமதி மங்களம் பால சுப்ரமணியன்

9