பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

111

நா நட்ட ஈடு குடுக்கணுமின்னு பொம்புள ஆபீஸரை வுட்டுருப்பாங்களோன்னு பயம் புடிச்சிக்கிச்சி. எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. என்னிய வுட்டுடுங்க. ரெண்டு பொம்புளப் புள்ளியா வச்சிட்டு நா எப்படியோ பிழைக்கிறேங்கன்னு அழுவற..

அவுங்க ஏங்கிட்ட “ஏம்மா பயப்புடுறீங்க. உங்களுக்கு உதவி செய்யணுமின்னுதா வந்திருக்கிறோம். நாங்கள் உங்களைப் போல் விவசாயப் பெண்களுக்கு, நிலத்தில் இறங்கி வேலை செய்யும் பெண்களுக்கு, நல்லபடியாகப் பயிர் செய்து விளைச்சல் காண உதவி பண்ணனும்னு வந்திருக்கிறோம். உங்களுக்கு இந்த ஊருதான?"

“ஆமாங்கம்மா, எங்கூட்டுக்காரருக்கோ, எனக்கோ சொந்தமா நெலமில்லீங்க. பங்காளிங்க பிரிச்சிட்டாங்க...”

"நிசமாவா?"ன்னு கேட்டாங்க.

எங்கூட்டுக்காரர் பண்ண தப்புக்காக, அந்தத் தரிசு நெலத்தயும் புடுங்கிட்டுப் போகத்தா இப்பிடிச் சூழ்ச்சி பண்றாங்கன்னு நினைச்சிட்டு, 'நீங்க போங்க இங்க நிலமும் இல்ல ஒண்ணுமில்ல’ ன்னு கதவச்சாத்திட்ட...

ஆனா அவுங்க வுடல. மறு நாளைக்கி, இந்தப் பாலாமணி அம்மாளக் கூட்டிட்டு வந்தாங்க. பாலாமணிகூட நா நடவுக்குப் போயிருக்கிற, அவுங்களுக்கு என்னியப் பத்தி நல்லாத் தெரியும். அவங்க தான்வா பயிற்சி வாங்குனதும் இப்பிடி இந்த கிராமத்துலன்னு துப்பு சொல்லியிருக்காங்க. அவங்க எல்லாம் எடுத்துச் சொன்னாங்க.

“பொம்பிளைன்னு ஏன் நம்மையே தாழ்வா நெனச்சுக்கணும்? இப்ப மத்தவங்க வயல்ல போயி, நடவு பண்ணுற, களை எடுக்கிற, அறுவடைக்கும் போறீங்க. இத்தையே நம்ம சொந்தமா இருக்கிற அறுபது சென்டிலோ, ஒரு ஏகரிலோ ஏன் செய்யக் கூடாது?"ன்னாங்க.

“அது என்னால முடியுங்களா? நா ஒரே ஆளு.”

“நீ ஒரே ஆளுதா. செய்யணும்னு நினைச்சா முடியும். நீ நினைக்கணும். உனக்கு அண்ணன், தம்பி, மாமன், மச்சான்னு