பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

கோடுகளும் கோலங்களும்

யாருமே இல்ல. அட, ஒரு உறவு கூடவா இரக்கமா இல்ல? நீங்க எல்லாத்தையும் நடக்காதுன்னுற கண்ணுல பார்க்காம, நடக்கும்னு பாருங்க. நாம்ப பொம்பளைங்க ரொம்பப் பேர் யோசிக்கறதே இல்ல. வாழ்வு வரும்போதும் யோசிக்கிறது இல்ல. தாழ்வு வரும்போதும் யோசிக்கிறது இல்ல. சரிதானா? யோசிச்சுப் பாருங்க... ?”

அவங்க புட்டுப்புட்டுச் சொன்ன பிறகுதான் யோசிக்கணும்னு தோணிச்சி. வூட்டுக்காரரு லாரில லோடு கொண்டு போயிட்டு வாரப்ப, பூவு, பழம், துணி, மணின்னு கொண்ட்டு வருவாங்க. ஆசையா புள்ளைங்களுக்கும் குடுப்பாரு. அவரு குடிக்கிறாரா, குடிச்சிட்டு வண்டி ஒட்டுறாரா, எங்க சாப்புடறாரு, எதுனாலும் கேட்டனா, இல்ல. ஆம்புளங்க வெளில போவாங்க. பவுரானவங்க அவங்கதா எல்லாம்னு இருந்த பெறகு ஒரேடியாப் போனதும் நம்மால ஒண்னும் ஆகாதுன்னு ஓஞ்சு போன நிலை மாறும். அவர் குடிச்சிட்டுத்தா வண்டி ஓட்டுனாரா, அவரு மேலத் தப்பான்னு கேக்கத் தோணல... எம் மேலியே எனக்கு நம்பிக்கையே இல்ல.

“இவங்க வந்து சொன்ன பிறகு யோசிச்சே.”

“எம் மாமியா, மருமகனத் துணையா, ஒரு ஆதரவா வச்சிட்டுக் கழனி வேலை செஞ்சாங்க. இப்ப நாத்தனாளுக்கு ரெண்டு மகன் இருக்கிறான். படிக்கவும் படிக்கிறா, கழனிக்கும் வாறான். நான் போயி ஏன் கேக்கக் கூடாதுன்னு தோணிச்சி.”

"மின்ன இந்த ரோசனையை யாருன்னாலும் சொன்னா ஊருல நாலு பேரு நாலு விதமாப் பேசுவாங்க. நாத்துனாரே, ஆரு குடியடி கெடுக்க வாரேன்னு பேசுமோன்னு பயந்தே.”

“இப்படியெல்லாம் சொல்லிட்டு, பயிற்சி கிளாசுக்கு என் பேரை எழுதிக்கிட்டாங்க. அஞ்சு நாளாக்கிப் புள்ளங்கள அக்கம் பக்கத்துல விட்டுப் போட்டுப் போனே. அங்கதா மண்ணை எடுத்துப் பரிசோதனைக்கு அனுப்புறதிலேந்து, விதையைத் தேர்வு பண்ணி, திரம் மருந்து போட்டு வச்சு நாத்தங்கால் பயிர் பண்ணுவதெல்லாம் சொல்லிக்