பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

121

வாரன்னு போயிருக்காப்பல... ஆசையாச் சொல்லிட்டுப் போச்சி...”

'அப்படியா? மச்சானும், மாப்புளயும் கறிக் குழம்புக்கு ஆசைப்படுறரா? சரி, நடக்கட்டும். பண்ணி ஊத்து...’ என்று மனசுக்குள் சொல்லிக் கொள்கிறாள். பழைய சோற்றைக் கரைத்துக் குடிக்கிறாள்.

“அடுப்பப் பாத்துக்க. நா வாரேன்” என்று வெளியே கிளம்புகிறாள்.

அப்பன் சாவடியில் இருக்கிறார்.

“அப்பா ஒரு நிமிசம் வாங்க...!

முள்ளுக்காத்தான் செடி சேலையை உராய்கிறது.

“ஏம்மா?"

“நா அந்தச் சின்னம்மா பூமில கடலக்காப் பயிர் வைக்கப் போறேன். நான் கத்துக்கிட்டாப்போல, செய் நேர்த்தி செஞ்சி வைப்பேன். இப்ப மண் பரிசோதனைக்கு அனுப்பணும். அத்தோட சர்வே நம்பர் வேணும்... தாங்க...”

“இப்ப வேணுமா?”

"ஆமா..."

“நா இங்க நிக்கிற, நீங்க பாத்துக் கொண்டுட்டு வாங்க... மண்ண பரிசோதனைக்கு அனுப்புமுன்ன, சர்வே நம்பர்... விவரமெல்லாம் எழுதி அனுப்பணும்...”

“சரிம்மா, நீ மண்ணு கொண்டிட்டு வா... நானே கொண்டிட்டுப் போய்க் குடுக்கறேன் ஆபிசில...”

“அவங்களுக்குத் தெரிஞ்சா எதும் பேசுவாங்கப்பா, வாணாம்... நானே போற...”

“சரி... நீ எடுத்திட்டு வா. நான் பாத்து எழுதித் தார...” வயல் வரப்புகளினூடே நடந்து, செல்லியம்மன் கோயில் பக்கம் பெரிய சாலை கடந்து அப்பால் ஏரிக்கரை மேடு தெரிகிறது. அதற்கும் முன்பாகத்தான் அந்த பூமி. கருவேல