பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


17


மாமா வீட்டுக்கு அவன் வந்து அழைத்துப் போவதாக இல்லை. சரோ, தன்னை வைகையில் ஏற்றி அனுப்பினால் தானே போய் விடுவதாகப் பிடிவாதம் செய்கிறாள். சரவணனுக்கு இன்னும் பரீட்சை ஆகவில்லை. தினம் தினம் காலையில் எழுந்து சண்டைதான்.

“இத பாரு சரோ, உன் மாமனுக்கு லெட்டர் எழுதிப் போடு. வயசுப் பெண்ணை நான் தனியா அனுப்ப மாட்டேன். உங்கப்பா வந்தால் கொண்டுட்டு விடச் சொல்லு!” என்று தீர்த்து விட்டு செவந்தி, வேப்பம் பிண்ணாக்கும் யூரியாவும் கலந்து வைக்கிறாள். “தார் கிடைத்தால் கொஞ்சம் கலந்து வைத்தால் மறுநாள் விசிற நல்லா வரும் அக்கா” என்று சாந்தி சொன்னாள். மீசைக்காரர் தங்களுக்கும் இவருக்கும் எங்கிருந்தோ தார் வாங்கி வந்து, கன்னியப்பனிடம் அனுப்பினார். கன்னியப்பன் இப்போது அவர்களுக்கு மிக நெருக்கம். எப்போது கரண்ட் விடுவார்களோ பார்த்துக் தண்ணீர் பாய்ச்சுவதில் அவனுக்கு ஒரு தனி அக்கறை விழுந்திருக்கிறது. வேர்க்கடைலையுடன் ஊடு பயிராக நட்ட பயிறு கொத்துக் கொத்தாக காய்ப்பிடித்திருக்கிறது. அங்கே இரவு காவல் இருப்பதை விட, காவலே தேவையிராத கொல்லை மேட்டு நெற்பயிருக்குக் காவல் என்று கழிக்கிறான்.

“ஓரெட்டு ராவுல இப்படிப் பார்த்து வாங்க...” என்று புருசனிடம் சொல்வதை விடுத்து, வீம்புடன் செவந்தியே வீட்டில் எல்லோரும் அடங்கிய பின் பயிரை இரவில் பார்க்கப் போகிறாள். இரவில் வானில் நட்சத்திரங்கள் ஒளிர, தனியாளாகப் போகும் அச்சமில்லை. வேல்ச்சாமியோ, பழனியோ தென்படுவார்கள். மடையில் நீர் பாயும் ஓசை வருகிறது. மணங்கள்... பயிரின் மணம், பசுமையின் மணம், தவளை, பாம்பு சரசரக்கும் உணர்வுகள்... எதிலும் இப்போது