பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

கோடுகளும் கோலங்களும்

“ஆனா நமுக்குப் போக என்ன மூஞ்சிருக்கு! அவ ரோசக்காரி. இப்ப எதினாலும் கொண்டுக் குடுத்தாத் துக்கியெறிவா. உங்கம்மா போல இல்ல. உங்கம்மா கொணம், அல்லாம் தனக்கு வேணும். ஆதாயம் பாப்பா. சொல்லு... ரோசம் கெடையாது. கலியாணத்தின் போது முருகனின் மச்சான் சம்சாரம் அதா அமெரிக்காவிலோ எங்கியோ இருக்காளே... அவ தஸ்ஸா புஸ்ஸ்-ன்னு இங்கிலீஸ்-ல பேசி, எப்படித் தூக்கியெறிஞ்சா. பந்தலுல! என்னிய வந்து, யாரோ சாமான் கொண்டாந்த ஆளுன்னு நினைச்சி, போய்யா இங்க சேர்ல உக்காரதீங்கன்னு வெரட்டினாள்ள? அப்பமே எனக்கு ஒரு நிமிசம் அங்கதங்கக் கூடாதுன்னு. அவுங்க என்ன செஞ்சாங்க? சம்பந்தின்னு பந்தல்ல மரியாதி வச்சாங்களா? சந்தனம் பூசுனாங்களா? என்ன மரியாதி செஞ்சாங்க?”

“நம்ம பைய போயிக் கால வுட்டுக்கிட்டா. பெரிய வெளக்குப் போட்டாங்க, படம் புடிச்சாங்க... நம்ம பையன் கோட்டு சூட்டு போட்டுட்டு நின்னா.... படம் புடிச்சிட்கிட்டே இருந்தாங்க. உங்கம்மாவுக்கு அங்க போயி நாமு நிக்கணும். வீடிஒ புடிச்சிக்கணும்னு ஆசதா. நம்ம புள்ள, எங்கப்பா, எங்கம்மா, தங்கச்சின்னு கூட்டி வச்சிட்டுப் படம் புடிக்கச் சொல்லணும். இவங்க படம் புடிக்கிற சமயத்துல, மாப்பிள்ளையையும் உன்னயும் காருவச்சி ஊரு பாக்கப் போங்கன்னு சொல்லிட்டான். எவ்வளவு குசும்பு! என் சகோதரி பயந்தா. அவனுக்கும் ரோசம் உண்டு. பட்டுக்கவே இல்லை. அடுத்த நாளே கிளம்புவம்னு கிளம்பிட்டா. பொண்ணக் கூட்டி வந்து வச்சிக்கிறது. மறுவூடு அழைக்கிறது. என்ன நடந்திச்சி? ரெண்டு பேரும் கலியாணமானதும் அனிமூன் போனாங்க. இங்க ரெண்டு பேரும் வந்து தலை காட்டிட்டு அன்னைக்கே போனாங்க. அப்பதா, அவஞ் சொல்றான்,அப்பா, இந்த ஸ்கூல் வேல அவங்க முப்பதாயிரம் குடுத்து எனக்கு வாங்கினாங்க. உங்ககிட்ட கேட்டா மூக்காலழுவீங்க. நம்மால முடியாதபோது ஒண்ணும் சொல்லுறதுக்கில்லங்கிறா. இவனப் படிக்க வச்சதே தப்புன்னு அப்ப தோணிச்சி. அதும் ஊரவுட்டுச் சிதம்பரம் போயிக் காலேஜூல சேத்தது அத்தவுட தப்புன்னு. பர்ஸ்ட்