பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/169

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

167

“ஆமா. நீங்கதா என்ன ஏதென்று எட்டிப் பார்க்குறதில்ல. நான்ல சபதம் போட்டிருக்கேன்.” பேச்சில் மனத்தாங்கலின் சுமை.

“கடலபுடுங்கப் போறமின்னு நீ சொல்லவேயில்லை. நா ஒரு அவுசர காரியமா பட்டணம் போகவேண்டியதாச்சு. அண்ணியோட தங்கச்சி வந்திட்டாங்க. சரோ ரிசல்ட் இந்த வாரக் கடாசில வராப்பில இருக்கு.”

“சரோ கடிதாசி எதானும் குடுத்தனுப்பி இருக்கா?”

“ஒண்ணுமில்ல. இவங்க பத்துநாக்கூட இருக்கல. ஒரு வாரம் இருந்திட்டு வந்திட்டாங்க. அவருக்கு லீவில்ல. அவங்களுக்கு என்ன பிரச்னையோ. சரோவ நாந்தா போய் கூட்டி வரணும் போல....” *

“அவ என்னமோ அங்கியே படிக்கறன்னு சொல்லிட்டுப் போயிருக்கா?”

அவன் முகம் பரவி வரும் இருட்டில் உணர்வுகளை புலனாகும்படி துலக்கமாகத் தெரியவில்லை. ஆனால் குரலில் உற்சாகமில்லை.

“நீ உள்ளாற வா செவந்தி, உங்கிட்ட ஒரு விசயம் பேசணும்...” இத்தனை ஆண்டுகளில் இப்படி அவன் கூப்பிட்டிருக்கிறானா? என்ன புது விசயம்?

ஈரப் பாவாடையுடன் உள்ளே வந்து உடை மாறுகிறாள். அம்மாவும் அப்பாவும் களத்து மேட்டில் இருக்கிறார்கள். முடியைத் துவட்டிக் கொண்டு, “நீங்கதா செத்த ராத்திரி காவலுக்குப் படுக்கணும். கன்னியப்ப வந்தா, கூலி வாங்கிட்டுப் போயிட்டா. அவனப் போயி கெஞ்ச எனக்கு மனசில்ல. சொத்து நம்முது.”

“சரி நான் கட்டிலக் கொண்டு போட்டுட்டுப் படுக்கிற. இல்லாட்டி என்ன, சாவடிப்பக்கந்தான செவந்தி எனக்கு இப்ப அவசரமா ஆயிரம் ரூபா வேண்டியிருக்கு. ஒரு வண்டி நல்லா இருந்திச்சி வாங்கினே. வண்டிய வச்சிட்டுப் போ,