ராஜம்கிருஷ்ணன்
15
"ந்தா, அத்த ஏணிப்ப கழனிக்கு இழுக்கற? அது படிக்கிற பொண்ணு... ராவெல்லாம் படிச்சிட்டுத்துங்கிருக்கு..."
"ஆமா, உம்புள்ள படிச்சிட்டு இப்ப பவுன் பவுனா கொட்டுறா. இவபடிச்சிட்டுக் கொட்டப் போறா! இதப்பாரு! மண்ணுதா சோறு போடும், கடைசி வரை...!"
இவளும் பதிலுக்குக் கொட்டி விட்டு மேற்கொண்டு காரியங்களைக் கவனிக்கப் போகிறாள்.
"தா கன்னீப்பா..."
"ரா, தண்ணி பாச்சிருக்கில்ல? நாஞ் சொன்ன மாதிரி, ஒரு குளம் போல பண்ணிட்டு, அதில இந்த பாக்கெட் அஸோஸ் பைரில்லம். இது தான் உயிர் எரு... இத்தக் கரைச்சிடு... நாத்தக்களைப்புடுங்கி அதிலவைச்சிடு... நடவு வயல்ல ரெடி பண்ணிடு... நா வாரேன்..." அவன் கருப்பாக இருக்கும் அந்த உயிர் உரப்பாக்கெட்டை மாற்றி மாற்றிப் பார்க்கிறான்... "நான் வந்திடறேன். நா வந்தப்புறம் எல்லாம் செய்யலாம். சாந்தி கூட வரேன்னிச்சி. நீலவேணி, அம்சு, உன் ஆயா வருதா?"
"ஆறாளு வரும்கா, அஞ்சாளு போதும் காக்காணிக்கு. ஆனா நீங்க நடவுல புது மாதிரின்னிங்க ஆறாளு வரும்" என்று சொல்லி விட்டு அவன் மாட்டை அவிழ்த்துக் கொண்டு, இவள் எடுத்து வைத்த சாமான்களுடன் போகிறான்.
மணல், இரண்டு பெரிய முளைகள், நீளமான கயிறு... பிறகு சைக்கிள் டயர் ஒன்று...
நோட்டுப் புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு செவந்தி சரி பார்க்கிறாள்.
பல் விளக்கிவிட்டு புருசன் வந்தாயிற்று. அம்மாதான் மாடு கறந்து வரவேண்டும்.
"சரோ. உலயில அரிசி போட்டிருக்கு. பாத்துச் சரிச்சி வையி. பாட்டி பால் கறந்ததும் டீ போட்டுக் குடியுங்க..."
"நா ஒரெட்டுப் போயிட்டு பார்த்து ஓடியாரேன்!" என்று கிளம்புகிறாள்.