பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/170

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

கோடுகளும் கோலங்களும்

நாளக்கி பணந்தாரே. நிலுவ வரணும்னு சொன்னேன். அவ மூணு நாளு களிச்சி வந்து இன்னக்கி பணம் கேக்குறான். நமக்கு ரொம்ப வேண்டிய பார்ட்டி. வண்டி நல்லாருக்கு, நா எடுத்துக்கறேன்னு ஓட்டிட்டுப் போயிட்டாரு. பணம் முன்னப் பின்னத் தருவாரு. அவரோட வண்டி பாங்கு வாசல்ல வச்சிட்டு உள்ள போனாராம். திரும்ப வரச்சே காணமாம். மேல நத்தத்திலேந்து சொசைட்டி ஆபீசுக்கு வராரு. ரொம்ப நல்ல மனுசன். ரெண்டு மாசமாத் தந்துடறேன்னாரு.இப்ப இவனுக்குப் பணம் குடுக்கணும். தெரிஞ்சவங்க யார் கிட்டயும் புரட்ட முடியல. ஒரு அஞ்சு நூறு குடுத்தாலும்... சமாளிச்சிக்குவே. வண்டிய எடுத்திட்டுப் போன்னு சொல்ல வண்டியும் இல்ல?”

இது வரையிலும் இவன் இப்படி இவளிடம் தன் இயலாமையைச் சொல்லிக் கொண்டதில்லை. கடுகு சிறுத்தாலும் காரம் உண்டு. வியாபாரத்தில் பெரிய வளமை இல்லை.

கடைகளில் ஏழெட்டுச் சைகிள் கூட இல்லை. ஆனால் கண்டிகை சைகிள் கம்பெனியில் இருந்து இங்கே சைக்கிள் விற்கும் ஏஜென்சி போல் வாணிபம் நடக்கிறது என்று தெரியும். அங்கு மூன்று சக்கர குழந்தை சைக்கிள், சிறுவர், பெரியவர்கள் சைகிள் என்று பண்ணும் ஃபாக்டரி பத்து வருசங்களுக்கு முன் ஏற்பட்டது. அந்த முதலியார் சிநேகம். அவருக்கு ஏதோ நஷடம் வந்துவிட்டது என்று அப்பன் சொன்னதாக நினைவு.

ஆக இப்போது...

பட்டாளத்தார் கொடுத்த பணம் மீதி இருக்கிறது. எப்போதும் வங்கியில் தான் போட்டு வைக்கிறாள். ஐநூறு இருக்கும். அவள் மிக சிக்கனமாகச் செலவு செய்திருக்கிறாள். அதைத் தொடவே இல்லை. வளையல்களை ஆண்டாளம்மாவிடம் வைத்து அவசரப் பணம் வாங்குவாள்...

“இப்பக் குடுக்கறதுக்கில்லீங்க. நாளக்கின்னா, வங்கிலேந்து எடுத்துத் தருவே. திடுமின்னு அஞ்சு நூறு எங்கிட்ட எப்படி?”