பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/171

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

169

“நாளக்கித்தா போதும்...”

இதுவும் ஒரு சுப சூசகம்தான்.

அன்றிரவுக்குக் கன்னியப்பன் காவலுக்கு வரவில்லை. இவ்வளவு நாட்களில் இப்படி அவன் வராமலிருந்ததில்லை. எப்படியானாலும் அவன் அந்தக் கழனிக்கு நீர் பாய்ச்சி, மராமத்துச் செய்யாமல் இருக்கமாட்டான். இருக்கட்டும்.

காலையில் வங்கிக்குச் சென்று அவள் பணத்தை எடுத்து கணவரிடம் கொடுக்கிறாள்.

செவந்தியின் கை ஓங்குகிறது.

ஆம். ஏக்கருக்கு ஆறு ஏழு மூட்டைதான் காணும் என்றுதான் அப்பன் சொன்னார். ஒன்னரை ஏக்கர் நிலத்தில், ஏறக்குறைய இருபது மூட்டைகள் விளைந்திருக்கின்றன. மிஷினில் காய்களைக் கொடுத்து தோடு நீக்கிய மணிகள்... முழி முழியாக... சிவப்பு மணிகளாக பூமி தந்த பரிசு. உழைப்பும் நம்பிக்கையும் தந்த பரிசு.. இல்லை தான்வா அம்மாள் மூலமாகக் கடவுள் காட்டிய வழி இது. பயிறும் கூட ஏறக்குறைய முக்கால் மூட்டை கண்டிருக்கிறது. கூலிகளையும் கணக்குப் போட்டால் இருபது மூட்டைத் தேறும்.

"அக்காஅந்த ஆபீசுக்குக் கூட்டிப் போங்க. நானும் கடலப் பயிர் செய்யிறேன்...” என்று சுந்தரி சொல்கிறாள்.

வங்கியில் பயிருக்கு வாங்கிய கடனை அடைத்தபின் கையில் இரண்டாயிரத்து சொச்சம் இருக்கிறது.

சரோவின் ரிசல்ட் வந்துவிட்டது. கணக்குப் பாடத்தில் முழு மதிப்பெண் பெற்றதுடன் பள்ளிக்கு மாநிலத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்ற பெருமையையும் தேடித் தந்திருக்கிறாள். இவள் பெயர் தினத்தாள்களில் வருகிறது. பள்ளி ஆசிரியை, ரீடா கடை தேடி வந்து பாராட்டிவிட்டுப் போகிறாள்.

எல்லோருக்கும் பெருமை. செவந்திக்கு ஆகாயத்தில் மிதப்பது போல் இருக்கிறது. “நீங்க இப்பவே ராத்திரி