பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/174

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

கோடுகளும் கோலங்களும்

“மாமா சாப்பிட வரச்சே ஒரு நாள் கேட்டேன். எனக்கு பாலிடெக்னிக்ல சேர அப்ளிகேசன் வாங்க வேணாமான்னு. சும்மா அவரு சொன்னத ஞாபகப்படுத்தறாப்பல. ரிசல்ட் வரலியே, வரட்டும் பாக்கலாம் என்று மழுப்பிட்டு எந்திரிச்சிப் போயிட்டாரு. பிறகு ரிசல்ட் வந்திடிச்சி. பேப்பர் காலம போட்டுட்டுப் போவா. இவங்க யாரும் எந்திரிக்க மாட்டாங்க. நான் பார்த்தேன். முதல் மூணுல நா மூணாவதுன்னு வந்திருக்கே. எனக்கு ஒரே சந்தோசம். மாடிக்கு ஏறிப்போன. கதவத் திறந்து வச்சிட்டுப் பிள்ளைங்க இவங்க படுத்திருந்தாங்க. அப்பவும் நான் கதவு தட்டினே... மாமா மாமா.. ன்னு கூப்பிட்டதும் அவரு அலறி அடிச்சிட்டு லுங்கிய இழுத்துக்கட்டிட்டு சரோவா என்ன இப்படி... என்ன விசேசம்ன்னாரு. நா பேப்பர காட்டின. சாவகாசமா சிகரெட் பத்த வச்சிட்டு, ‘இதுக்குத் தா இப்படி எழுப்பினியா? சரி. கங்கிராட்ஸ்... நல்லா பண்ணிட்ட. கீழே போ நா வாரேன்..' ன்னாரு."

“இதுக்குள்ள மாமி எந்திரிச்சிட்டாங்க. நானும் அங்கியே நின்ன. தெரிஞ்சதும் அவங்க சந்தோசப்படுற மாதிரி 'பரவாயில்லையே நீயும் ராங்க்ல வந்திட்டியா?'ன்னாங்க".

“பாலிடெக்னிக் ... விமன்ஸ் பாலிடெக்னிக் படிக்கணும்ங்குது. என்ன சொல்ற சுகந்தா..”ன்னாரு மாமா.

“பாலிடெக்னிக் படிச்சி இவ என்ன பண்ணப் போறா? ஏற்கனவே ஆம்புளக்கே வேல இல்லே. இவப்பாம்மாவால மூணு வருசம் ஆஸ்டல்ல சேத்துப் படிக்கவைக்க முடியுமா? அப்படியே படிக்க வச்சப் பிறகு ஒரு பி.இ. பி.டெக். மாப்பிள்ளையைத் தேடி பிடிக்க முடியுமா? ஒன்னரை லட்சம் செலவாகும். இவம்மா நம்ம பூமில விவசாயம் பண்ணுறா அதுல ஒரு லாபமும் நமக்கு இல்ல. கடசீல அத வித்து தா கலியாணம் கட்டணும்னு ஒரு இக்கட்டுல கொண்டு வப்பாங்க. என்னக் கேட்டா நா ஒரு யோசனை சொல்வே. உறவும் இருக்கும். கலியாணத்துக்கும் செலவில்ல? அவ பேருக்கு ஒரு பிசினஸ்ஸாம் இருக்கும்...”ன்னாங்க. அது என்ன தெரியுமா? அந்த லூசுக்கு என்னக் கல்யாணம் கட்டி வைக்கிறதாம். அவங்க அவன் பேரில் ஒரு பப்ளிக்