பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/176

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

கோடுகளும் கோலங்களும்

“சரி, எதும் சாப்பிட்டுருக்கமாட்டே. குளிச்சிட்டு வாம்மா. சோறு குழம்பு எல்லாமிருக்கு, வா! முகம் எப்படி வாடி கறுத்துப் போச்சு? நா உங்கப்பாவப் போயி இட்டுட்டு வாங்கன்னு அனுப்பினே. வயசுப் பெண்ணத் தனியே ஏத்தி அனுப்பி இருக்கிறான். இவன்லாம் ஒரு மாமன்!” பாட்டி பிரமை பிடித்தாற்போல் உட்கார்ந்திருக்கிறாள்.

தாத்தா சாவடியில் இருந்து ஒடோடி வருகிறார்.

“ஊரே கொண்டாடுது. உன் டீச்சர் வந்ததும் உன்னியப் பார்க்கச் சொல்லிச்சாம். சோறு சாப்பிட்டு வா கண்ணு, சைக்கிள்ள நானும் வாரேன்.”

புதிய ஏடுகள் திரும்புகின்றன.

மதுரை சென்ற கணவன் அங்கு ஒரு நாள்கூட தங்கவில்லை. மகள் இல்லை என்று தெரிந்த மறுநிமிடமே அவன் திரும்பி விடுகிறான். அதிகாலையில் வந்து கதவு இடிக்கிறான்.

அடுத்து அவர்கள் சரோவின் மேற் படிப்பை இலட்சியமாக்கி முயற்சிகள் செய்கிறார்கள். சரோவைப் பள்ளியில் அழைத்துப் பாராட்டுகிறார்கள். பத்திரிக்கைக்காரர்கள் அவள் இலட்சியம் பற்றிக் கேட்கிறார்கள். அதற்கு அடுத்த மாதம் காஞ்சிபுரம் அரிமா மகளிர் சங்கத் தலைவி அவள் என்ன படித்தாலும் அதற்கு உதவி செய்வதாக அறிவிக்கிறார்.

விண்ணப்பப் படிவங்கள் பெறுவதும் சான்றிதழ்கள் வாங்குவதும், நேர்முகம் காணச் செல்வதுமாக நாட்கள் ஒடுகின்றன.

ப்ளஸ் டுக்கு சேரு. நீ டாக்டராகவோ, இன்ஜினியராகவோ வரலாம் என்று ஒரு பக்கம் யோசனை சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் அவ்வளவுக்கு முடியுமா என்ற மலைப்பு.

“ஏம்மா நீ என்ன சொல்லுற? அப்பா இன்ஜினியரிங் போலாம்னு சொல்றாங்க. எனக்கென்னமோ, பிளஸ் டு ரெண்டு வருசம், பிறகு என்ட்ரன்ஸ் டெஸ்ட். பிறகு காலேஜ் நாலு வருசம். முடியுமா? நான் பாலிடெக்னிக்லசேர்ந்து மூணு