பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/200

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

கோடுகளும் கோலங்களும்

தொழிற்சாலையில் நீளப் பல பகுதிகள் இருக்கின்றன. இயந்திரங்கள் இயங்குகின்றன. அராவுதல் வெட்டுதல் வட்ட வடிவ மாக்கல் என்று...

செவந்தி மலைப்புடன் பார்த்து நிற்கையில் சரோ, ஈடுபாட்டுடன் ஒவ்வொரு பகுதியிலும் சென்று பார்க்கிறாள். வரைதல் என்று ஒரு தனிப்பகுதி. அதையும் கடந்து அவர்கள் முழுதாக உருவாக்கப்பட்ட இயந்திரக் கலப்பை நிற்கும் ஓரிடத்திற்கு வருகிறார்கள்.

“இங்க இப்ப டிமான்ஸ்ட்ரேட் வசதி இல்ல” என்று

சொல்லிவிட்டு அவர் பல இணைப்புகளைக் காட்டுகிறார்.

“இத பாருங்க இது புழுதி உழவு. ரோடோடில்லிங்.”

"இதுதா பட்லர் இல்ல?”

கட்டிகளை உடைக்கும் சீப்பு போன்ற கொழு முனைகள். இவர்கள் மாட்டுடன் இணைக்கும் மத்துக் கடைவது போல் சேற்றைக் குழம்பாக்கும் பட்லர்.

“இது என்ன கத்தி கத்தியாக?”

"இதுதான் அறுவடை செய்யும்.”

“நீங்க வாங்கறதானா ரெண்டே நாள் டிரெய்னிங் போதும். அது நாங்களே தாரோம்.”

“எவ்வளவு டீசல் ஆகுதுங்க ஒரு ஏகர் உழ?”

“ஒரு மணிக்கு ஒண்ணரை லிட்டர் ஆகும். ஒரு நாளைக்கு எட்டு மணிநேர வேலை செய்தால் மூனரை ஏக்கர் உழலாம்.”

"ஏயப்பா..” என்ற செவந்தி மலைக்கிறாள். “மூணு ஏர் மூணு சோடி மாடு...” கணக்குப் போடுகிறாள்...

ஒன்றும் புரியவில்லை.

ஆனால் சரோதான் வெகு நேரம் அவரிடம் ஏதேதோ ஆங்கிலத்தில் பேசுகிறாள். தன் கைகளால் அதன் கைகளைத் தூக்கி நிமிர்த்திப் பார்க்கிறாள்.