பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

கோடுகளும் கோலங்களும்

நினைச்சேன். மேலும் டீசல் இல்லாம மான்யூல் டிரில்லர் பெண்கள் ஒட்டலாம்ன்னு சொன்னாங்க.”

“ஒண்ணு பண்ணாங்க... வொர்க்அவுட் ஆகல..”

“சார் எனக்கு இங்க வேலை கிடைக்குமா? பெண் தொழில் முனைவோர்ன்னு சொன்னாங்க. ரிசப்ஷன் டிராயிங்கலேந்து கடைசிவரை ஒரு பெண் கூட இல்லை. எங்களைப் போல இருக்கறவங்களுக்கு இங்கே வாய்ப்பே இல்லையா?”

அவர் சிரிக்கிறார். “இங்கே அவங்க பெண்களை வேலைக்கே எடுப்ப தில்லை. முன்பு ஒரு பெண்ணை டிராயிங் செக்ஷனில் வேலை கொடுத்து வைத்தாராம். அவள் நிமித்தமாக இங்கே காதல் ஊதல்ன்னு பிரச்னை வந்திட்டதாம். அதற்குப் பிறகு பாலிசியாகவே வச்சிட்டதாகக் கேள்வி. நீங்க கேட்டுப் பாருங்க...”

சரோ ஒன்றும் பேசவில்லை.

செவந்திக்கும் உவப்பாக இல்லை. வெளியே வருகிறார்கள்.

மணி இரண்டடித்து விட்டது.

ஓர் ஒட்டலைக் கண்டுபிடிக்கிறார்கள். எலுமிச்சை சாதமும் தயிர்சாதமும் வாங்கிச் சாப்பிடுகிறார்கள்.

செவந்தி சின்னம்மாவுக்காக அரை கிலோ திராட்சைப் பழம் வாங்கி வைத்துக் கொள்கிறாள்.

இருவரும் மூன்று மணியளவில் அந்த விடுதியை நாடி வருகின்றனர். பகலின் அமைதியில் விடுதி உறங்குகிறது.

சரோவைப் பார்த்ததும் கூர்க்கா உள்ளே விடுகிறான். முன்னே உள்ள விருந்தினர் கூடத்தில் வந்து மணி அமுக்குகிறாள். வார்டன் அம்மா எட்டிப் பார்க்கிறாள்.

"ஒ.... ராசாத்தியப் பார்க்க வந்தவங்களா? ராசாத்தி... ?”