உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



20

கோடுகளும் கோலங்களும்

20 கோடுகளும் கோலங்களும்

பட்டையும் எழுத்துக்களுமாகத் தாங்கி நிற்கும் அறிவிப்பை சேற்றில் குத்தி வைக்கிறாள்.

“ஏய் என்ன இது?”

“கான்வா மகளிர் பண்ணை...”

‘ஹோ' என்ற சிரிப்பு!"காக்காணி பண்ணையாயிடிச்சா?”

"காக்காணியோ அரைக்காணியோ, இது தான்வா மகளிர் பண்ணைதான்...”

“அது என்னக்கா, தான்வா..?”

அம்சு அதைப் படித்து விட்டுக் கேட்கிறாள்.

“இங்கிலீசில், தமிழ்நாடு விமன் இன்அக்ரிகல்ச்சர் என்று இந்தத் திட்டத்துக்குப் பெயர். இப்ப நாமளும் காலம் காலமா உழுவதும், நாத்துப் போடுவதும், நடவும், கள பறிக்கிறதும், அறுப்பறுக்கிறதும் பாத்திட்டு வாரோம். முன்னக் காலத்துல தொழு உரம், சாம்பல் இதுங்கதா தெரியும். அப்புறம் யூரியா பொட்டாஷ்னு போட்டாங்க. பூச்சி புகையான் மருந்தடிச்சாங்க... இப்ப, இதுங்களிலிலே சின்னச் சின்ன துணுக்கங்கள் கையாண்டா, பயிர் நல்லா வருது. களை பூச்சியெல்லாம் கட்டுப்படுத்துதுன்னு கண்டிருக்காங்க” என்று சாந்தி விளக்குகிறாள். கன்னியப்பனின் பாட்டி வரப்பில் குந்தி வெற்றிலை போடுகிறாள்.

“நீங்க வேற நோட்டு எடுத்திட்டு வந்திருக்கிறீங்களா..?”

"ஆமாம்..."

"என்ன கன்னிப்பா...?"

செவுந்தியும் சாந்தியும் வந்து பார்க்கிறார்கள். குளம்போல் மண்ணை வெட்டி வரைகட்டி, அதில் நுண்ணுயிர் உரத்தைக் கலக்கியிருக்கிறான். பாக்கெட் வெற்று உரையாகக் கிடக்கிறது தடத்தில்.

நாற்று முடிகள். அதில் உரம் பெறுகின்றன. எட்டு முடிகள்.