பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

219

நீராடி முடிந்து திருநீரு பூசிக் கொண்டு வேம்படியில் வந்து உட்காருகிறார்.

ரங்கன் அருகில் செல்லுமுன் சாமியே கையசைக்கிறார். அவன் பணிவுடன் அருகில் செல்கிறான்.

சாமி அவனை அழைக்கவில்லை. அப்பனைத்தான் கையசைத்து அழைக்கிறார்.

‘சாமி. ... f”

குரல் தழு தழுக்க அப்பா அவர் காலடியில் நெடுஞ்சாண் கிடையாக விழுகிறார்.

அவர் எழுந்து அவரை எழுப்புகிறார். அப்பாவுக்கு நிற்க முடியவில்லை.

அவர் பிடித்து அருகில் உட்கார வைத்துக் கொள்கிறார். “எத்தனை நாளா இப்படி...?” அப்பா பதில் சொல்லவில்லை. தேம்பித் தேம்பி அழுகிறார். "நாளக்குக் காலம, சுத்தமா ஒண்ணும் சாப்புடாம வெறும் வயிற்றோட இங்க வாங்க... ஒரு பச்சிலைக் கசாயம் தாரேன். மொத்தம் நாலு வேளை. ரெண்டு நா... எல்லாம் சரியாப் போயிடும்... அந்தத் தண்ணி நெனவே வராது...” முதலில் எல்லோருக்கும் என்னதென்று புரியவில்லை.

மூடிக்கிடந்த கண் திறந்தாற்போல் ஒரு பிரகாசம்...

இரண்டு நாட்களும் காலையிலும் மாலையிலும் அவரே பயபக்தியுடன் சென்று அந்த பச்சிலைக் கசாயத்தை வாங்கிக் குடிக்கிறார். வெறும் தயிர் சோறுதான் உணவு.

இரண்டாம் நாள் கசாயம் கொடுத்ததும், “நாளைக்குக் காலம எண்ணெய் தேச்சுத் தலை முழுகிடுங்க. உங்களைப் பிடிச்ச வேதனை நமைச்சல் எல்லாம் போய் மன அமைதி வரும்..."

“பிறகு, இஞ்சி நூறு கிராம் வாங்கிக் கழுவித் தோல் சீவித் துண்டு துண்டா நறுக்கி நிழல் உலர்த்தலாகக் காய வையுங்க.