பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

57

போய்விட்டது. மேலுரம் கலந்து கொண்டு இருந்தாள். சாந்தியின் வயலுக்கு நடவென்று போனாள்.

ஒரு கண் கொட்டாங்கச்சியைப் பார்த்து அடுப்பில் போடுகிறாள். அது பாதி எரிந்ததும் வெளியில் இழுத்து அணைக்கிறாள்.

தேயிலைக் கசாயம் போட்டு விட்டு, அடுப்பில் உலை போடுகிறாள்.

தெருக்கோடிக்குப் போவதற்குக் கூட சைக்கிள்.

“கர்ப்பூரம், தூக்கில் பால்....இதென்னடீ, பொட்டலம்?”

வெங்காயம் பொரிந்த மணம் பகோடா...

“இது ஏது?”

“வேணிப் பெரிம்மா குடுத்தாங்க!”

“குடுத்தாங்களா? அவ பாவம் முதுகொடிய உழைக்கிறா. அடுப்படில வேகுறா... நீ வாங்கிட்டுவர?”

“நாஒண்னும் கேக்கல. குமாரு காலம கணக்கு சொல்லித் தரச் சொன்னா. சொல்லிக் குடுத்தேன். பெரிம்மா என்னப் பாத்ததும் நிறுத்திக் கொண்டுக் குடுத்தாங்க.”

“சீ...ஏ இப்பிடிப் புத்தி போவுது உனக்கு?”

“நாங் கேக்கலம்மா! சத்தியமா....”

“சரி சரி ..... இந்தாங்க பாட்டிக்கு ரெண்டும், தாத்தாக்கு ரெண்டும் குடு....”

“பாட்டி எங்கே?”

பாலைக் கலந்து தேநீரை டம்ளரில் ஊற்றுகிறாள்.

கிணற்றடியில் சலதாரையில் தண்ணீர் ஓடுகிறது.

பாட்டி அங்கேதானிருக்கிறாள். மாடு ஈன்று விட்டது. குளம்பு கிள்ளிக் கன்று கிடாரி என்று பார்த்து இருக்கிறாள்.

நஞ்சுக் கொடி தொங்குகிறது. மாடு கன்றை நக்கி நக்கிக் கொடுக்கிறது. சரசரவென்று அரிசி கழுவிக் கழுநீரில்