முன்னுரை
Page வார்ப்புரு:Largeinitial/styles.css has no content.பயிர்த் தொழிலையும், பயிர்த் தொழில் செய்பவர்களின் வாழ்க்கைப் பிரச்னைகளையும் மையமாக்கி ஏற்கனவே, நான் “சேற்றில் மனிதர்கள்” என்ற நாவலை எழுதியுள்ளேன். அந்த நாவல் இலக்கிய உலகில் நல்ல வரவேற்பைப் பெற்றதுமன்றி, இரு பரிசுகளுக்கும் உரித்தாயிற்று. பாரதீய ஞானபீடம், இதை இந்தியில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. இது மலையாளத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
புரட்சிப் பெண்மணி மணலூர் மணியம்மா 1930களில் விவசாயத் தொழிலுக்காகக் கீழ்த் தஞ்சைப் பிரதேசத்தில் இயக்கத்தைத் தோற்றுவித்தவர். 1953இல் காலமான அவருடைய வாழ்க்கை வரலாற்றை- கிராமத்து எளிய விவசாயக் கூலி மக்களின் வாய் மொழியாகவே கேட்டறிந்து “பாதையில் பதிந்த அடிகள்” எழுதும் போதும் இதே பயிர்த் தொழிலாளரையே எழுத்து மையம் கொண்டது.
இந்த நாவல் ‘கோடுகளும் கோலங்களும்’, பயிர்த் தொழிலையும் அதில் ஈடுபடும் பெண்களின் வாழ்வையும் மையமாக்கி எழுதப்பட்டதுதான். ஆனால் இது முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் பார்வையைச் செலுத்தி எழுதப்பட்டது. எப்போதுமே, முரணான உண்மைகள் சிந்தையை நெருடும் போது அந்த நெருடலே அதை ஆராய வேண்டும் என்ற உந்துதலைத் தோற்றுவிக்கும். அதுவே படைப்புக்கும் ஆதாரமாகும்.
சுதந்தரம் பெற்ற பின்னர், மாறிய அரசியல் சூழலில், ஒரு கால் நூற்றாண்டு காலம் கழிந்த பின் அந்த அரசியல் சுதந்திரம் உழுதுண்டு வாழும் கடைக் கோடி மனிதரின் வாழ்வில் எத்தகைய மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றன என்ற கோணத்தில் பார்த்து எழுதிய நாவல் ‘சேற்றில் மனிதர்கள்.’
அவர்களுடைய சமூக, பொருளாதார மேம்பாடுகள், பல போராட்டங்களுக்குப் பின்னரும் கனவாகவே இருந்த நிலை கண்டேன். சுதந்தரம் பெற்ற பின்-நாற்பதாண்டுக் காலம் ஓடிய பிறகு விஞ்ஞான தொழில்நுட்பங்கள் எல்லாத் துறைகளிலும் வியக்கத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றன. பயிர்த் தொழிலில், பெருகி வரும் மக்கட் தொகைக்கு