பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய் ஒய்ந்த போதும் மனம் ஓயாத என் தோழர் மீரா இதோ மறுபிறவி எடுக்கின்றார். குக்கூ கோடையும் வசந்தமும் முதலான கவிதைத் தொகுதிகளின் மூலமாக,

முன்பு ஒருமுறை நா. காமராசன் எழுதினார்:

'ஒய்வில்லாத சரித்திரப் போராட்டங்களால் மண் னெல்லாம் சிவப்பாகிவிட்ட அந்த மறவர்பூமியின் புரட்சிக் கவிஞர். 'சாகாத வானம் நாம் என்ற பாடலின் மூலம் பாரதிதாசனின் வாரிசாக மாறியவர்.... அண்ணாவால் பலமுறை பாராட்டப்பட்டு அவருடைய கடைசிக் கடிதத்திலும் குறிப்பிடப்பட்ட கொள்கை வீரர்....'

எத்தனை தீர்க்கதரிசனமான சொற்கள் இவை என்பதை இன்னொரு முறை நிரூபிக்கின்றது 'கோடையும் வசந்தமும்'. இரண்டு பருவ காலங்களின் பெயரை இணைக்கிறது நூலின் பெயர். இரண்டு மன நிலைகளைப் பேசும் ஒரு கவிதையின் தலைப்பே நூலின் பெயராக வடிவெடுத் திருக்கிறது. இருவேறு உலகத் தியற்கை'யைப் பார்க்கும் மீராவின் வாழ்வியல் பார்வைக்கு இந்தத் தலைப்பே எடுத்துக் காட்டாகிறது. ஒரு வசந்த காலத்தில் காஞ்சிப் பட்டை அணிந்து வர ஒரு கன்னி இல்லையே என்ற தவிப்பு. ஒரு கோடை காலத்திலோ மனைவி உறையூர்க் கைத்தறிச் சேலை கூட உடுத்து வர வக்கில்லையே என்ற மலைப்பு. கோடை வறுமைக் குறியீடாகிறது, வசந்தம் இளமை வெளியீடாகிறது.

எந்த நூலில் முக்கியமான எந்தக் கவிதையை எடுத்துக்

கொண்டாலும் மீராவின் இந்த இருநிலைச் சித்திரிப்பை வெவ்வேறு தளங்களில் பார்க்கலாம்.

8