பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முப்பெரும் உறவால் மூளும் ஒவ்வொரு நாளும் அவள் நெஞ்சில் ஒப்பாரியே.... Ο இரும்பைப் பொன்னாக்கும் வித்தைக்குப் பெயர் இரச வாதம்.... உறவைப் பகையாக்கும் விந்தைக்குப் பெயர் என்ன வாதம்? தந்தை கணவன் மைந்தன் என்ற சிந்தைக் கினிய சிறந்த உறவை மங்கை யிடத்தில் பகையாய் மாற்றும் விந்தைக்குப் பெயர் என்ன வாதம்? Ο சிலேட்டில் அ, ஆ எழுதும் சின்னவயது முதல் சிலேட்டுமத்தால் ஆ ஆ.... என்று முனங்கிச் சீவன் ஒயும் நாள் வரை பந்தமாய் வாய்த்த பாவிகள் மூவர்க்கும் செருப்பாய் உழைத்துத் தேய்கிறாள், மாய்கிறாள். கோடையும் வசந்தமும் O 105