பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ο ஆளப் பிறந்தவன் ஆண்தான் அவனை அண்டி அடங்கி ஒண்டி ஒடுங்கி வாழப் பிறந்தவள் வனிதை என்னும் கீழோர் நெஞ்சைக் கீற வேண்டும்; O புல்லென் றாலும் புருஷன் தானே கல்லென் றாலும் கணவன் தானே சொல் லென்றவனும் கேட்டால் சுடச்சுட நில்லென் றவனை நிறுத்தி வாங்கிக் கொள்' என் றெடுத்துக் கொடுக்க வேண்டும் දා அண்ணா ஒருமுறை அழகாய்ச் சொன்னார்; எட்டு வயதில் அடியே எவனைக் கட்டுவாய் என்று கேட்பார்; அதைப் பதி னெட்டு வயதில் கேளார்; எனினும் மொட்டுப் பருவம் வந்ததும் எதற்கும் கட்டுப் படாமல் கவர்ந்த வனைக்கை விட்டு விடாமல் விருப்ப முரைத்துத் தொட்டு மணக்கும் துணிவு வேண்டும் O தேனை அளக்கும் இதழ்கள் போதுமா? தேசம் அளக்கும் தெளிந்த அறிவுடன் வானை அளக்கும் வல்லமை வேண்டும் வாலெண் டீனா ஆக வேண்டும் வாலெண் டீனா ஆகவேண்டும், கோடையும் வசந்தமும் O. 109