இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பெண்ணே! நீ ஓர் சிரிக்கும் ரோஜா..... உன்னைக் கசக்க ஒருகை முனைந்தால் முள்ளை நீட்டு.... மூர்க்கம் காட்டு... பெண்ணே....! நீ ஓர் புண்ணிய ஆறு உன்னைச்சுயநல அணைகள் தடுத்தால் பொங்கு..... புறப்படு..... பொடிப் பொடியாக்கு.... Ο ஆண்டாள்தான் நம் ஆண்டவன் தன்னையே ஆண்டாள் என்றே அழகாய்ப் பேசி மடக்கப் பார்ப்பார் அடக்கப் பார்ப்பார் கடக்கப் பார் அக் கதையை எல்லாம் மார்கழி மாதம் வைகறைப் போதில் நீராடப் போதுவீர் நேரிழையிர் எனக் கூப்பிடுவார்..... கோடையும் வசந்தமும் C 111