இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
என்னமாய் ஒளியடிக்கிறது தேரில் வலம் வரும் உற்சவமூர்த்தியாய்! O மெதுவாய் என்ன செய்கிறது.... சங்கப் பாண்டியனின் சந்தேகத்தைப் பரிசீலித்துப் பார்க்கிறதா? உன் முகத்தைவிடவா அது மஞ்கள் உன் கண்களைவிடவா அது நீலம் உன் பற்களைவிடவா அது வெள்ளை உன் இதழ்களைவிடவா அது சிவப்பு பிறகு எதற்கு? எடுத்தெறியேன்! ○ 'ஏன் ஒரு மாதிரியாய்” என்கிறாய் ஒன்றும் தெரியாதவள் போல் சின்னக் கோபத்துடன் சிணுங்கலுடன் ஏறெடுத்துப் பார்க்கிறேன் உன் தலையை..... பூ இவ்வளவுதானா என்று புன்னகை செய்கிறாய் II4 ○ மீரா