இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
விரித்து வைத்தபோது அது தங்கத் தாம்பாளம்... அவள் அதில் வெடித்த மாதுளம் பழம்.... பார்த்துச் சுவைத்தேன் படுத்துத் துய்த்தேன் அந்த முதல் இரவில் அடுத்தடுத்து வந்த பற்பல இரவில்! எனக்கு வயதோ நாற்பது இப்போது..... மேலிருக்கும் வெல்வெட்டுத் துணியோ வெண்பட்டுத் துணியோ நைந்தும் உள்ளிருக்கும் வெள்ளை ஆதிக்கம் வெளியேறிப் போய்த் தொய்ந்தும் அழகு குலைந்தும் மெருகு குறைந்தும் தேய்ந்தும் கிடந்தது அது.... பேசாமல் ஒரு பெருமூச்சோடு சுற்றி வைத்தேன் கட்டி வைத்தேன்! நிமிர்ந்தேன். கோடையும் வசந்தமும் O 117