இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பருத்திப் பூ உன் மணிக்கவிதை! C நீ ஒரு பித்தன்.... ஆனாலும் சட்டையைக் கிழித்ததில்லை.... காரணம் உன் சட்டையிலே ஏற்கெனவே ஏராளமான கிழிசல்கள்... பேனாமுள் ஊசியினால் எங்கும் நீக்கமற நிறைந்திருந்த சமூகக் கிழிசல்களைத் தைக்கவந்த பித்தன் நீ! புதுமைப் பித்தன் நீ! Ö நீ ஒரு காதலன்.... தேவருலகுக்குத் தேவைப்பட்ட பாவையர் ரம்பை ஊர்வசி திலோத்தமை என்றிவர் யாரும் உன் கனவில் வரவில்லை.... கள்மயக்கம் தரவில்லை கொடி தூக்கிய குமரர்களும் குண்டடிபட்ட மறவர்களும் வெள்ளை ஆதிக்க கோடையும் வசந்தமும் C 121