பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜா ரவி வர்மாவின் கோலச்சித்திரம்! நாங்களோ மதன் வரையும் - வெறும் கேலிச் சித்திரம்! Ο பாரதி! விடுதலை பெற்று வெள்ளி விழாக் கண்ட பின்னும் உன் கனவுகள் இன்னும் அறுவடை ஆகவில்லை நீ விதை விதைத்தாய்.... நாங்கள் 'நீர் பாய்ச்சுவோம்’ உரம் போடுவோம் என்று நம்பினாய்.... நாங்களோ விதைகளையே எடுத்துத் தின்னும் சுயநலக்காரர்கள்! விதைத்தவனே, நீ வரவேண்டும் கைநிறையக் கதிர்மணிகள் தரவேண்டும், நூற்றாண்டு விழாக் காணும் வேளையிலே 'இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ கோடையும் வசந்தமும் 0 125