இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
للق وإيعي இயற்கைப் பெண் எழுதும் இனிய தொடர்கதை மயங்கிக் கடலுக்கு மலையனுப்பும் ஒரு தூது இந்திரனார் மண்ணுலகில் இயற்றியதண்ணிர்ப்பாதை சந்திரனார் சூரியனார் முகம்பார்க்கும் கண்ணாடி. வான நெசவாளி நெய்தெறிந்த புதுச் சேலை மீன்கள் துள்ளி விளையாடும் மைதானம்! திரைக் கூத்து நடக்கின்ற சிங்காரப் பொன்மேடை நுரை எழுத்தால் நிலையாமைக் கருத்துரைக்கும் நூதனநூல்| தேனாய்ச், செவியை இனிக்க வைக்கும் தெள்ளமுதாய்த் தானாய் இசைக்கின்ற தந்திரப் புதுவீணை குடிக்காமல் தள்ளாடும் குமரிப் பெண்; எடுத்து மடிக்காமல் கிடக்கின்ற மாபெரிய காகிதம் நிலத்தை வளைக்கவரும் நீண்ட மலைப்பாம்பு பலத்தை வெளிப்படுத்தப் பாய்ந்துவரும் பட்டாளம். கோடையும் வசந்தமும் O. 127