'கடைக்குப் போய் காய்கறி வாங்கி வந்த கருமவீரனே வருக பற்று தேய்த்துப் படிப்படியாக சமையல்காரியாய்ப் பதவி உயர்வு பெற்ற பங்கஜமே வருக.....' என்று சுவரொட்டிகள் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார். தமிழனின் தன்மானச் சீரழிவு இவ்வரிகளில் தொக்கி நிற்கின்றது. கொத்தனார் மகனும் முதலாளி மைந்தனும் மணலில் விளையாடும் போது, 'இது எங்க அப்பா கட்டிய வீடு' என்று ஏழை மகன் சொல்ல, மறு நாள் வேறு கொத்தனார் வேலைக்கு வந்தார் என்பது வேதனையில் பூத்த நகைச்சுவை ‘எங்கள் முதலாளி கொதிக்கும் வெயிலில் நிற்கிறார், கொட்டும் மழையில் நிற்கிறார் என்று தொடங்கும் கவிதை, 'இப்போது தானே ஆலை வளாக வாசலில் அசையாமல் நிற்கிறார் நிலையாய் எங்கள் முதலாளி சிலையாய்' என்று முடியும் போது நம் இதழ்க் கடையில் மலரும் புன்னகை ஒரு சமுதாய அவலத்தையும் சேர்த்தே பிறக்கிறது. மீராவின் நகைச் சுவை வேப்பம் பூப் பச்சடி, இனிப்புப் பூசிய மருந்து. பாறையையும் நெகிழ்விக்கும் பசும் புல்லிதழ். நீண்ட கவிதைகளைச் சரம் தொடுத்தாற்போல் எழுதிச் செல்லும் இயல்பு மீராவுக்குக் கைவந்த கலை. உழவன், இந்த மே தினத்தில், புதுமைப் பெண்ணே புறப்படு, துர தரிசனம், பாம்புகள் பலவிதம், முதலிய கவிதைகள் Il
பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/13
Appearance