பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழுக்கேறிப் போன அஞ்சுபவுன் சங்கிலியை அழித்துச் சேர்த்து அடுத்த வீட்டுக் கனகாபோல் இரட்டை வடத்தில் எடுப்பாய்ச் செய்யலாம் என்றால் முரண்டு பிடித்த முரளி மனோகர் இறங்கி வந்திருக்கிறார் இரு.... கொஞ்சம் பொறு யு.ஜி.சி.பாக்கி வந்துவிடும் அப்புறம் பார் என்கிறீர்கள்... ஆளை மயக்கும்படி அழகாய்ச் சிரிக்கிறீர்கள். காலுக்கொரு வெள்ளிக் கொலுசென்று கேட்டாலும் கஜகரணம் போட்டாலும் சித்திரை வரட்டும் என்று தட்டிக் கழிக்கிறீர்கள்.... செல்லமாய்க் கன்னத்தைத் தட்டிக் கொடுக்கிறீர்கள்... இப்படியே வாழ்க்கை முடிந்துவிடும் இல்லையா? என்று புத்தகத்தில் எழுதாத புகார்களை வாசித்தாள் சலிப்பாய் என் வண்ண மயில்.. சமாளிக்கும் வித்தகத்தில் தேர்ந்தந:ன் விடுவேனா....? 'காலம் கனிந்ததடி கவலை ஒழிந்ததடி கோடையும் வசந்தமும் C 129