பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லைக்காக..... ஆத்தாடி என்றிதழ்கள் அசைய, அசையாமல் கண்ணிரண்டை வைத்திருக்கும் கும்பல்...கழைக் கூத்தாடி ஆடுகிறான். ஆடுகிறான் கயிற்றின்மேல் - அவன் குடும்பம் முழுதும் ஒரு குறிக்கோள் இல்லாத கூட்டணியாய்க் கவலையுடன் கைவைத்திருக்கும் ஒட்டிய வயிற்றின் மேல்! வயிற்றின் எல்லை ஒரே ஒரு சாண்..... அதில் வளரும் பசியின் எல்லையோ விரிந்து பரந்து வியாபித்திருக்கும் நெடுவான்! ஆரியக் கூத்தோ, திராவிடக் கூத்தோ கழைக் கூத்தோ, ஆடைஅவிழ்க்கும் களைக் கூத்தோ எல்லாம் காரியத்துக்காக..... ஒரு கவளச் சோற்றுக்காக! எல்லாம் சோற்றுக்காக..... என்றாலும் கோடையும் வசந்தமும் 0 131