பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த நாட்டுக்காக இந்தியனாய்ப் பிறந்த பேற்றுக்காக என்று சுகங்களைத் துறந்து சொந்த பந்தங்களை மறந்து எந்த வினாடியும் இன்னல் தலையில் இடியாய் விழும் என்பதும் தெரிந்து இதோ.... ஏறுகிறான்.... முன்னேறுகிறான் கயிற்றுப் பாலத்தில்.... எதிரிகளைப் பந்தாட... போர்க்கோலத்தில்.... ෆ அந்தரத்தில் தொங்கும் சின்னச் சிலந்தியும் தன்னுடலின் கசிவையே இழையாக்கி நூலாக்கி வலைபின்னுமாமே... அந்த வகையினிலே பயிற்சியினால்-நாளெல்லாம் செய்த முயற்சியினால் கட்டி முடித்த கயிற்றேணியில் ஏறி ஆற்றை மடுவை, அகன்ற ஓடையை அற்புதமாய்த் கடக்கிறான். குன்றுகளுக்கிடையில் ஒரு குட்டிச் சிங்கமாய் நடக்கிறான்... இவனைப் போல் இன்னும் எத்தனை தீரர்கள்.... இந்த தேசத்தின் எல்லைக்காக.... எல்லைகாக்க! இமயம் போல் நிமிர்ந்துநிற்கும் வீராதி வீரர்கள் 奪) பர்ண சாலையில் பத்திரமாய் - பவித்திரமாய் சீதையும் தசரதன் செல்வனும் இணைந்திருக்க சிந்தை கலங்காமல் துயின்றிருக்கக் கண்விழித்துக் கங்குல் முழுதும் காத்திருந்தான் ஒருவன்.... அண்ணன் மீதுள்ள பாசத்தால் 232 C 18tr