உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்து நீ செத்துச் சுண்ணாம்பாய்ப் போய் முப்பது வருடம் முடிந்திருக்கும்; ஆனாலும் முத்து, என் மனக்கதவை உன் நினைவுக்கரம் தட்டாமல் இல்லை. மூன்று மாதங்களுக்கொரு முறை கோவை, மதுரை கும்பகோணம், நெய்வேலி சென்னை தஞ்சை என்று ஏதாவது ஒர் ஊரில் ஏதாவது ஒர் நாளில் முடிவெட்டும் போது சிந்தனையில் மூழ்கிய சில கணங்களில் என் கண்களில் சித்திரமாய் வந்து நிற்கும் உண்முகம. கோடையும் வசந்தமும் 0 137