பூத்தொடுக்கும் மீராவின் விரல் நளினத்துக்கு எடுத்துக் காட்டு. குழந்தையின் பட்டுக் கன்னம் போல இத்தனை மென்மையாகத் தமிழில் எழுத முடியுமா என்று ஆச்சரியப் படவைக்கும் மீராவின் கவிதைகளில் அங்கங்கே முத்தும் வைடுரியமுமாய் தத்துவத் கீற்றுக்கள் தலைநீட்டிப் பார்க்கும். நாட்களில் சில மகிழ்வைத் தருகின்றன. சில துயரத்தைத் தருகின்றன. அவற்றைப் பற்றிப் பேசும் ஆசிரியரின் ஆழத்தைப் பாருங்கள்: 'எவனோ காலத் தேனடையைக் கசக்கிப் பிழிந்தான் நாவில் விழுந்ததோர் தேன்துளி; அதனை மணநாள் என்று மகிழ்ந்து சொல்வோம் எவனோ காலக் கடலைக் கடைந்தான் ஆலகால நஞ்சின் ஒரு துளி இதழின் நுனியில் பட்டது. அதனைப் பிணநாள் என்று பேசுகின்றோம்" 'ஒரில் நெய்தல் கறங்க' என்ற புறப்பாடல் வந்து நினைவில் மோதுகின்றது. வாழும் காலத்தில் நமக்கு ஒரு வரமாகக் கிடைத்த மீரா வெறும் கவிஞர் மட்டுமல்ல - காலத்தின் குரல். அவரை அறிவதும் அவரை உணர்வதும் நம் கால இலக்கிய வாதிகளுக்கு வாழ்வின் பெருமிதம். இந்தத் தொகுதியில் கல்லறை வரிகள் என்றொரு கவிதைப் பகுதி. அதில் மணப்பெண், விபச்சாரி, வெட்டியான் எனப் பலருடைய கல்லறைகளுக்குப் பொருத்தமான வரிகளைப் பொறித்துள்ள கவிஞர் என் I3
பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/14
Appearance