இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஒரு பக்கம் ஒரு பக்கம் கவிதை எழுதென்று சொன்னார் எங்கள் ஆசிரியர் சாளரத்தைத் திறந்துவைத்துப் பார்த்தேன். சிந்தித்தேன். ஒருபக்கம் வானத்தைப் பார்த்து வரவா எனக் கேட்கும் மரங்கள் அடர்ந்த மலைகள். ஒரு பக்கம் ஆழங் காண முடியாத அகழிகள் போல் இருண்ட பள்ளத்தாக்குகள். ஒருபக்கம் உயர்ந்து நிமிர்ந்து நிற்கும் ஓங்கார நாதம் கீதம் ஒலிக்கும் கோயில்கள் 142 0 மீரா