இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஒருபக்கம் எதிரியாய் வாய்த்த ஏழை மனிதனைக் குதறத் துடிக்கும் நாய்கள் குரைக்கும் குப்பைத் தொட்டிகள். ஒரு பக்கம் வெண்பளிங்கு மாளிகைகள்.... மண்டபங்கள். ஒருபக்கம் சாக்கடையோரத்தில் சாய்ந்து விழச் சம்மதிக்கும் பொத்தல் குடிசைகள். ஒரு பக்கம் விக்ஸ்டப்பியின் அடிப்பாகம் போல் ஒட்டிய வயிற்றுடன் உலாவும் ஒரு ஜீவன். ஒரு பக்கம் வெடிக்கப் போகும் பலூன் போல் வீங்கிய வயிற்றுடன் வீற்றிருக்கும் குபேரன் ஒருபக்கம்..... ஒ. . . . . ஒரு பக்கத்தைத் தாண்டி விட்டதே....? கோடையும் வசந்தமும் 0 143