பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்லறை என்றொரு கவிதையும் எழுதியுள்ளார். தலைப்பே நம்மைத் திடுக்கிட வைக்கிறது. "என் கல்லறையில் எழுதுங்கள் கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்" நம்மை அதிர வைக்கும் வரிகள் இவை. ஆனால் மீரா, உங்கள் கனவுகளும் கற்பனைகளும் வெறும் காகிதங்கள் அல்ல - அமர காவியங்கள். நீங்களே சொல்லவில்லையா - 'கவியின் கனவை கற்பனை என்று தள்ளாதீர்கள் அந்தக் கனவுகளில் ஆயிரம் தீபங்கள் சுடர் விடலாம்” என்று. நீங்கள் ஆயிரம் தீபங்களை ஏற்றிய ஆரத்தி தீபம். தலைமுறைகளை வெளிச்சப்படுத்தும் அந்தத் தீப ஒளி எத்தனை சூரியர்களை நாளைக்கு எழுப்புமோ, யாருக்குத் தெரியும்! ஒளியின் தூதுவனே, வாழ்க பல்லாண்டு. பொள்ளாச்சி அன்புடன் 8-3-2002 சிற்பி 13