இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தலைவனல்லன்: ஆதிக்கப் படமெடுத்த பாம்பின்முன் கள்ளிருக்கும் மலர்மாலைக் கனவுகண்ட தலைவன் அல்லன்; முள்ளிருக்கும் பாதையில்கால் முன்வைத்த தலைவன் அவன் சட்டசபை ஆசனத்தைக் கருதும் தலைவனல்லன், கொத்தடிமைச் சாசனத்தை எரிப்பதற்குத் தாவிவந்த தலைவன் அவன் பதவிக்குப் பலர்முன்னே பல்லிளித்த தலைவனல்லன் உதவிக்கு நான்என்(று) ஓடி வந்த தலைவனவன். அறைக்குள்ளேபேட்டி அளிக்கும் தலைவனல்லன் சிறைக்குள் ளேகிடந்து சீரழிந்த தலைவனவன் மாணவரை ஏமாற்றித் தூண்டிவிடும் தலைவனல்லன் ஆனவரை நாட்டுணர்வைத் தூண்டிவிட்ட தலைவனவன் வெள்ளைச் சுவர்வாழும் விளம்பரத் தலைவனல்லன் உள்ளச் சுவர்வாழும் உத்தமத் தலைவனவன் 150 0 மீரா