பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15? அரவம் நாங்கள் ஆபத் துணர் என ஆதிக்க வெறியர் சொன்னார் அதனைக் கொத்தும் கருடன் நான்என அழகன் சிதம்பரன் சொன்னான். கரைதெரி யாத கடல்நாங்கள்என கம்பெனி யார்கள் சொன்னார் கப்பல் ஒட்டும் தமிழன் நான்எனக் கவிதைச் சிதம்பரன் சொன்னான் C! சுதேசி மலர்களுக்கு - அவன் தொடுக்கும் புண்ணிய நாராய் இருந்தான் தூய்மைச் செயல்களுக்கு - அவன் தொடர்ந்து தாங்கும் வேராய் இருந்தான் விடுதலை வேள்விக்கு - அவன் விரும்பிச் சொரியும் நெய்யாய் இருந்தான். வீரத் திலகருக்கு - அவன் வினைமுடிக் கும்வலக் கையாய் இருந்தான். Ο நூலடியில் கிடக்கின்ற பொருளை நாளும் நுட்பமுடன் ஆய்ந்தாய்ந்து சொன்ன மேதை ஆலடியில் பரவுகின்ற நிழல்போல் தம்மை அண்டியவர்க்(கு) ஆதரவு தந்த அண்ணல் 0 மீரா