பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருட்செல்வர் பூவில் மணம் பிறக்கும்; யாழில் இசை பிறக்கும்; பாவில் சுவை பிறக்கும்; பண்பாளர் அருட்செல்வர் சேவையிலே சக்தி பிறக்கும் சிறப்பறிவார்..... சர்க்கரை ஆலைக்குச் சக்தியின்பேர்; அக்கறையோடியங்கும் நூற்பாலைக்கும் சக்தியின்பேர்; நிதியிருக்கும் நல்லநிறுவனத்துக்கும் சக்தியின்பேர்; கலையழகும் கருத்தழகும் கண்க்வர சிலையழகுத் தோற்றமுடன் சீராய்ப்பவனிவரும் சாரமுள்ள இதழுக்கும் சக்தியின்பேர்...... எங்கெங்குக் காணினும் சக்தியடா - தம்பி ஏழு கடல் அவள் வண்ணமடா! என்று பாவேந்தர் இவரை நினைத்துத்தான் இசைத்தாரோ? அன்று முதல்பாட்டை, அகம்குளிர Ο 156 0 மீரா