பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குவதாம் நல்ல மனம் படைத்த நாச்சிமுத்து மைந்தர்இவர் சூழ இருக்கின்ற சுற்றத்தார் தம்மோடு ஏழையரை, எளியோரை எப்போதும் தாங்குகிறார்.... Ç இவர் பணக்காரர் மட்டுமல்லர் நல்ல குணக்காரர் மல்லிகைப்பூ மணக்காரர் இவர் கைகள் - ஏற்றியும் வைக்கும்; இறக்கியும் வைக்கும்; இன்ப விளக்கை ஏற்றி வைக்கும்; துன்பச் சுமையை இறக்கி வைக்கும். இவர் கைகள் கொதிக்கவும் வைக்கும்; குளிரவும் வைக்கும்; பற்பல வீட்டில் உலைநீர் தன்னைக் கொதிக்க வைக்கும்; உள்ளம் தன்னைக் குளிர வைக்கும். தலைநகரின் தாகத்தைத் தணிக்கவரும் திட்டத்தைத் தெலுங்கு கங்கையென்று செப்புகிறார்.... இவரைக் கொங்கு கங்கையென்று ஒப்புகிறார்.... இன்றிந்தக் கொங்கு கங்கை கோடையும் வசந்தமும் C 157