இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவைப் பகுதிக்கு மட்டுமின்றி சிவ கங்கைப் பகுதியிலும் கனிவாகப் பாய்கிறது. எங்கும் பரந்து இனிதாகப் பாய்கிறது..... ஆதலினால் இனி இவரைக் ஆனந்தமாய் தமிழ் கங்கை என்போம்! பாரதத் தங்கம் என்போம்! O சங்க காலத்தில் ஏழு வள்ளல்கள்..... இந்தச் சங்கட காலத்தில் ஒரு வள்ளல் போதுமா? இது என்ன ஒரவஞ்சனை என்றே பிரமணிடம் கேட்டால் பிரியமுடன் அவன் சொல்வான்: ஏழு பேரென்ன எழுபது பேருக்கு ஈடு கொடுத்து எல்லோர்க்கும் கொடுக்கின்ற 'சக்தி மிக்க வள்ளல் இவர்..... ஈதல் இசைபட வாழ்தல் என்பது அன்றைய வள்ளல்கள் வழக்கம்; வாழையடி வாழையென வந்த இவரோ ஈதலே வாழ்க்கையாய் ஆக்கியிருப்பவர் என்றிசைப்பான்.... நன்றிசைப்பான்..... அன்னம் இலக்கிய வட்டம் நடத்திய விழாவில் வாசித்தது மதுரை, 28.1.1990 158 0 மீரா