நீரோட்டக் கவிதைகளின் தேரோட்டம் (மதிப்புரை) கவிஞர் தேனரசன் § எப்போதுமே மீரா கவிதையை நினைத்தால் கண்முன் அலையாடுவன அவரது சமூககோபம், அதை வெளிப்படுத்துகிற பாங்கில் கையாளும் நியாயமான எள்ளல்- அங்கத உத்திகள், இயல்பான நகைச்சுவை, பண்பட்டுக் கைவந்த தொழில் நுணுக்கத்தின் படைப்புக் கலை நயம், சொற்களின் நளினம் ஆகியவைகளே. கோடையும் வசந்தமும் என்னும் இந்தத் தொகுப்பிலும் கவிஞர் மீராவின் மேற்சொன்ன படைப்புக் கூறுகள் நிரந்து பரந்து கிடப்பதைப் பார்க்கலாம். அன்றொரு காலம்..... பாரதி பாடம் கேட்டுப் பழகிய பரவசத்தால் சொல் புதிதாய், பொருள் புதிதாய், சுவை புதிதாய், மரபின் செழுமையும் வளமையும் சிந்திவழிய 'இராசேந்திரன் கவிதைகள் வெளிவந்து கவிதை நேயர்களின் நெஞ்சங்களைச் சிவகங்கைத் திசை நோக்கித் திரும்ப வைத்த காலம் கைமணக்க நெய் மணக்கும் செல்வந்தர் வீட்டுத்தித்திப்புப் பொங்கலையும், இல்லாத மக்களின் பருக்கைக் கனவுகளையும் எண்ணிப்பார்த்து, தமிழர் திருநாளில், "தெருவோரச் சாக்கடையில் வருமா தெப்பம்' என்று ஏக்கவரிகள் வரைந்து பேரறிஞர் அண்ணா நெஞ்சில் இடம் பிடித்த காலம். 14
பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/16
Appearance