பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்றுபட்டு..... அவர்கள் செங்குத்தான மலைச் சிகரங்களில் ஏறுகிறார்கள்.... மேலே மேலே! உருகும் பணிகள் எலும்பைத் துளைக்க நெருப்புப் பிழம்பாய் எதிர்த்துநிற்கிறார்கள்; பகைவனின் பதுங்கு குழிகளைச் சவக் குழிகளாக்குகிறார்கள். முகாம்களைக் குண்டுமழையில் குளிப்பாட்டுகிறார்கள். ஊண்உறக்கம் கருதாமல் முன்னேறுகிறார்கள். எங்கோ குக்கிராமத்தில் வசிக்கும் வயோதிகத் தாய்தந்தையர் நினைவு வரவில்லை. தங்கைக்கு மணம் முடிப்பது தள்ளிப் போகிறதே என்ற ஏக்கம் எதிரொலிக்கவில்லை; தம்பியின் படிப்புச் செலவு பற்றித் கோடையும் வசந்தமும் O. 159