இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தனிமையில் உட்கார்ந்து யோசிக்க முடியவில்லை அவர்கள் நெஞ்சில் நிற்பதெல்லாம் தேசம் தேசம் தேசம்! Φ முகம் சூரியப் பிரகாசமாய் ஒளிர விழிகள் அக்கினி நட்சத்திரமாய் மிளிர இதயம் எரிமலையாய்த் தகிக்க சுற்றி நில்லாதே பகையே நீ தூள்தூள் என்று வெற்றி முழக்கமிட்டு வீரசபதமிட்டு அவர்கள் போராடுகிறார்கள் அவர்கள் முன்னேறுகிறார்கள். நாம் இங்கே, பாதுகாப்பு அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று பரபரப்பாய் அறிக்கைமேல் அறிக்கை விடுகிறோம் பயிர் இதுவென்றுகளையை நடுகிறோம். பலவீனமான அரசுதான் பகைவன் ஊடுருவலுக்குக் காரணம் என்று உறுமி மேளம் கொட்டுகிறோம். ஓங்கிக் கைதட்டுகிறோம். மாபெரும் விவாதங்கள் புரிய மாநிலங்கள் அவையைக் கூட்டவேண்டும் என்று வாய்ப்பாட்டுப் படிக்கிறோம் வசைபாடத் துடிக்கிறோம். 180 0 மீரா