இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இடையில் ஒத்திவைக்கப் படுமா தேர்தல் பொத்தி வைத்த ஆசை புஸ்வாணமாகுமா என்று மெத்தவும் கவலைப்படுகிறோம்; - கண்ணிர் விடுகிறோம். மதவாதமா ஊழலா எந்த அணி வெல்லும் என்று பட்டிமன்றம் நடத்துகிறோம்; பரிதாபமாய்ப் பொழுதைக் கடத்துகிறோம். நம்நெஞ்சில் நிற்பதெல்லாம் வேஷம் வேஷம் வேஷம்! "Ο அவர்கள் பேசும் மொழி ஒன்றல்ல பிறந்த இடம் ஒன்றல்ல மதம் ஒன்றல்ல மார்க்கம் ஒன்றல்ல என்றாலும் ஒன்றானார் அவர்கள் உள்ளத்தால். கார்கில் போரின்போது எழுதியது. 'ஓம் சக்தி' இதழில் வெளிவந்தது. கோடையும் வசந்தமும் 0 161