பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உன்னை வைத்தால் உற்பத்தி குறையுமே! அண்ணலும் அவளும் ஆசையாகப் பார்க்கலாம்; இதழோடிதழைத் சேர்க்கலாம்; அதற்கும் மேலே..... சொர்க்க வாசல் பக்கம் போக முயலும்போது அரசின் இலவச பலூனை எடுத்துவிடுவார் நீ உன் முகத்தை செம்மையாகக் காட்டினால் போதும் விரைவில் போக்குவரத்தை சரி செய்யும் நீ வீட்டிலும் வரத்தைச் சரிசெய்யலாமே! பயணிகளைக் குண்டுக்குப் பலியாக்கத் திட்டமிட்டு பேருந்தில் ஏறவரும் எத்தர்களின் இடுப்பெலும்பை ஒடிக்கலாம் வங்கியில் கொள்ளையடிக்க புல்லட்டில்வரும் புல்லர்களை தடுத்து நிறுத்தித் தரையில் இழுத்துப் போடலாம், நையப் புடைக்கலாம். ஐயன் திருவள்ளுவன் 'நிற்க என்று சொன்னதை 26.8 C மீரா