பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எவன் கேட்டான் தெருவள்ளுவன் நீ சொல்லாமல் சொல்கிறாய் எல்லாரும் கேட்கிறோம். 'என் புருஷன் எப்போதும் கிழித்த கோட்டைத் தாண்ட மாட்டார் என்று தண்டோரா போடும்' மனைவியர்க்கு இப்போது ஊரில் உள்ள புருஷர்கள் எல்லாரும் நீ கிழித்த கோட்டைத் தாண்டாது நிற்கும் தாத்பரியம் புரியும் ஆயிரம் கார்கள் அணிவகுத்துப் பின்தொடர அலங்கார பவனிவரும் அகங்கார அமைச்சரும் உன் கடைக்கண் அருளுக்குக் காத்து நிற்க வேண்டும். அப்படி என்ன மந்திர சக்தியோ உன்னிடம் எழுபது கல் வேகத்தில் வருபவனும்கூட அப்படியே கல்லாய்ச் சமைந்து நிற்கிறான். கோடையும் வசந்தமும் 0 169