உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணக்குக்கு வந்தாலும் கருத்துப் பிரவாகத்தில் கற்பனைப் பிரயோகத்தில் இடைவெளிக்கு ஏதும் இடமில்லை இந்தத் தொகுப்பில், 'படை திரட்டப்பாடுகிறேன் என்று முதல் கவிதையிலேயே எழுச்சிப் பிரகடனம் பண்ணுகிறார் மீரா, மனிதரில் பிறப்பால் மேல்கீழ் என்று பேசும் பாதகங்களைக் கண்டு பதைக்கும் நெஞ்சம் பாரதிக்கிருந்தது போலவே நம் மீராவுக்கும் இருக்கிறது. அதனால், "கீழ்மேல் என்றின்னும் கிறுக்கில் உளறுகின்ற பாழ்வாய் கிழிக்கும் மொரு படைதிரட்டப் பாடுகிறேன்" என்று பேசுகிறார். மனிதர்களின் பாவத்துக்காகத் தாம் ரத்தம் சிந்தி அவர்களை மீட்பதற்காக ஏசு வந்தாரென்றால், கவிஞர் மீராவோ பாவநிழலே படிய விடாமல் முன் கூட்டியே தடுப்பதற்குத் தேவனாய் வந்து மனத்தெம்பு ஊட்டுவதாகச் சொல்கிறார். நம், மீரா கவிதைகளில் பொதுவாக ஊடுருவி நிற்பது அவரது சமூக கோபம். அவருடைய ஒட்டுமொத்தக் கவிதைகளைப் பட்டிமண்டப வாதத்தில் வைத்தாலும் மிஞ்சி நின்று வெல்லுபவை சமுதாய நோக்குக் கவிதைகளே. இந்தக் கவிதையிலும் அந்தக் கோபமே தெறித்து நிற்கிறதைக் காணுகிறோம். எளிமையான எளிமை இவர் படைப்பின் தனித்தன்மை. இதற்கு எடுத்துக் காட்டாகும் கவிதைகள் இத்தொகுதியில் நிறையவே உள்ளன. வெட்கத்திரை என்ற தலைப்பில் ஒரு கவிதை. இவரோடு சொந்தம் கொண்டாடி, வம்பளந்து, இவரைக் கேலிச் சித்திரமாக வரைந்து, எதிர்பாராததாய் வரும் பள்ளி விடுமுறைக் குதூகலத்தைப் பங்கு போட்டுத் 16